உண்மையான உயர் நட்பு:-

வீதி யோடு நடந்து வர
விளையாட ஓடி வர
விரசமாக பேசி வர
வரும் நட்பெல்லாம் நட்போ…

படிக்கும் வகுப்பறைக்கு துணை வர
பணவசதியுடன் தேடி வர
இளமையுடன் பாடி வர
வந்த நட்பெல்லாம் நட்போ!

திரை படத்துக்கு கூடி வர
மது அருந்த குழு வர
மாதை கிண்டல், கேலி செய்ய
வரும் நட்பெல்லாம் நட்பன்று…

நண்பா! நண்பா! நண்பா!

கலங்கமென்ற கறை துடைக்க
இழந்த கைக்கு இணையாக
கலங்கிய கண் கண்டு கலங்காகண் தன்னுதிரம் வடிக்க
காலத்தை வெல்லும் நட்பொன்றுண்டு!

பகை கொண்ட நட்பும் திசை மாறி
மிகையான புகையாய் போயினும்
நட்பை எரிக்காமல் காத்து - நாளை வரும்
வினை விதியெதிர்க்கும் நட்பொரு நட்பு!

நட்பு மரம் வாழ வைக்க துடிக்கும்
ஆணிவேராக சில நட்பு
ஆலம் விழுதாக பல நட்பு
உலகில் வாழும் உண்மையான உயர் நட்பு!!!!

நன்றி

வாழ்க வளமுடன்

சிவா

எழுதியவர் : சிவா (3-Apr-13, 9:42 am)
சேர்த்தது : siva71
பார்வை : 101

மேலே