காதல் – காமத் தீ பிறப்பிடம்!!!

வாயுதிர்க்கா காதல்யிங்கே மன
நோய் தந்து இதயம் தாக்க
பாய் விரித்த காதல் அங்கே
நோய் விட்டு வளி யோடுமே…

பூத்த பருவம் பார்த்ததை விரும்ப
காத்திருந்து பார்க்க சொல்வது எது?
சிறகு முளைத்து ஆசை தும்பி பறக்க
விரக தாபத்தில் வுடல் துடிப்பதேன்?

ஓசையின் நேசத்துக்கு ஏங்கும் உடலுக்கு
ஆசையும் அச்சமும் தந்தது யார்?
உடலாசை வெப்பம் உள் தொடங்கி
உருகி வெளியோட வற்றி போவதேன்?

நூலுடன் காற்றில் பறக்கும் பட்டமாக
உடலாசை இன்பமாக உயர பறக்க
உப்புகரிக்கும் உடல் வெப்பத்தில் கொதிக்க
ஐ புலன் அரண்மனையின் அரசன் யார்?


விழி ரசிக்க,வாயருந்த, நுகரும் நாசி
மொழி அமுதில் செவி குளிர
தோல் சதையுரசலில் வுடலுயக்கம் கூட, குறைய
குதுகலிக்கும் இன்பம் தருவது எது?

மூலத்தில் உயிர் நாடி உறங்கி யொடுங்க
ஏலத்தில் விட்டால் எவர் வந்தெடுப்பார்?
காயத்தில் தலையடி ஒன்றல்லவே
மாய வுடல் மயக்கம் வருவதெப்படி?

ஒளியும் இருளும் ஓரிடத்தில் கூட
ஓர் கோடி செல்கள் ஒன்று கூடியியங்க
மண்டச்சுரப்பு ரசாயனம் உடலினுள் பாய
மூலவெண்ணெய் உருக்கும் காமத்தீ பிறப்பிடமூளை!

நன்றி

வாழ்க வளமுடன்

சிவா

எழுதியவர் : சிவா (3-Apr-13, 11:25 am)
பார்வை : 156

மேலே