காதல் திருமணம்
நம்
திருமண வாழ்க்கை
பதினைந்து
மாதங்களை கடந்துவிட்டது !
காதல்
திருமணங்கள்
ஏமாற்றத்தையே தருமென்ற
அறிவுஜிவிகளின்
கருத்தை
பொய்யாக்கி போனது
நாம்
கடந்துவிட்ட நாட்கள் !
நம்
உறவில்
சண்டைகள் வந்ததில்லை
சந்தோசம் உண்டு !
சந்தேகங்கள் வந்ததில்லை
நம்பிக்கை உண்டு !
அதிகாரம் வந்ததில்லை
அன்பு உண்டு !
மலராய்
நம்
நாட்கள்
மகிழ்ச்சியாய் பூத்தாலும்
முள்ளாய்
சில நேரங்கள்
நீ
இழந்த உறவுகளின்
வலி குத்துகிறது !
புகுந்த
உறவுகளை
நீ
அறியுமுன்னே
பிறந்த
உறவுகளை
இழந்தாய்
உன்
இழப்பை
எப்படி ஈடுசெய்ய?
உறங்கும்போதும்
நீ
தூக்கத்தில்
"அம்மா" என்று
முனங்குவாயே
அதை
உன்
அன்னைக்கு
எப்படி புரியவைப்பேன்?
தாய்மை
அடைந்த நொடியிலும்
உன் மனம்
தாய் மடியை
தேடியதே
அதை
உன்
அன்னைக்கு
எப்படி புரியவைப்பேன்?
மருத்துவமனை
வளாகத்தில்
ஒவ்வொரு பெண்ணும்
தாயோடு
பரிசோதனைக்கு
வருவதை பார்த்து
உன்
கண்கள் கலங்குமே
அந்த
கண்ணீரை
உன் அன்னைக்கு
எப்படி புரியவைப்பேன்?
காதல்
திருமணம்
செய்து கொண்டதற்காக
பெண்ணிற்க்கு
அவள்
குடும்பம்
கொடுக்கும் தண்டனை
"ஆசிட் விச்சு" - யையும் விட
கொடுமையானது !!!