காதல் கற்பித்த வாழ்க்கை பாடம்!!!
காதல் கற்பித்த வாழ்க்கை பாடம்!!!
பொறுமை:-
நடந்து வரும் ஓவியம் காண
கடந்து போகும் காலம் மறந்து
நாளெல்லாம் காத்திருக்கும்
பொறுமை பாடம் கற்றேன்!
அழிந்த கோபம்:-
உடன் பிறந்த இளங்கோபத் தீ
உச்சந் தலையேறி நின்ற காலம்
பல நாள் பார்த்த பனிப்பார்வையில்
நனைந்து அணைந்து போனதம்மா!
ஒப்பனை:-
அன்னை அலங்கரித்தாள் அப்பொழுது
என்னை யான் யென்றுமே அலங்கரித்ததில்லை
உன் விழி பார்வையால்
என்னை நான் அலங்கரித்தேன்!
விழித்த இளமை:-
இளமை மொட்டு மட்டுமல்ல
என் முக மொட்டு கூட
நின் கருவிழி வண்டு கண்ட பின்பே
பூத்தது கண்ணாடியில் பார்த்தது!
முயற்சி, பயிற்சி:-
நீ வீசும் ஒற்றை பார்வைக்கு
காத தூரம் கால்நடையாக
கருக்கலில் கண் விழிக்கும்
முயற்சி, பயிற்சி தந்ததும் நீயே!
வீரம்:-
கை ஒலிக்கும் சத்தம் கேட்டு
ஓடி மறைந்த காலம் மலையேற
நின்னை பழிக்கும் இளஞ் சிங்கங்களை
எதிர்த்து நிற்கும் நெஞ்சத்துணிவு பெற்றேன்!
நன்றி
வாழ்க வளமுடன்
சிவகுமார்