மனம் திறக்கிறேன் (அவளோடு இவன்)

மனம் திறக்கிறேன் (அவளோடு இவன்)

என்னோட வாழ்க்க
எப்புடியோ இருந்துச்சுடி
யாருடி நீ எதுக்குடி புள்ள
என்ன அப்புடி தொரத்துன
என்ன புடிக்கலன்னுத்தானே
சொல்லி திரிஞ்சே
பின்னே எதுக்குடி
எம்பின்னாலே திரிஞ்ச

போரப்பக்கமெல்லா
நா ஒரு பொறம்போக்கு
நானா தேடிப்போனதில்ல
ஏனோ வந்துச்சுடி இவளே
நாயென்னத்தச் சொல்லிப்புட்டே
நாயென்னத்த செஞ்சுபுட்டே
தீயாவே பாக்குற திங்குறவ போல ,,

எல்லாரோடுஞ் சொல்லிருக்கேன்
எதப்பாத்து யேங்காதவன்னு
கதச்சொல்லி கதச்சொல்லி
எல்லாரயு ஏங்க வச்சே
ஏம்பக்கம் பாக்க வச்சே ,,
ஒன்ன மட்டும்பாக்குறப்போ
அடிவயித்து கிளப்பும் புள்ள

நாம்போர தெசையெல்லா
நீ என்னப்பத்தி சொல்லிவச்சே
நா எங்கல்லா இருக்கேனோ
அங்கெல்லா பின்னாடி வார
எதயோ நாம்பாக்க
நீயென்ன பாத்துக்கெடந்த

என்னசுத்தி யாரிருந்தா
உனக்கேண்டி இவ்வளவு நோவு
எப்புடியோ கண்டுபுடிச்சி
எல்லாரயு வெலக்கப் பாத்த
என்னடின்னு கேட்டுப்புடவு
நெருங்கிவார நடுங்குறேண்டி
எப்புடித்தா வந்தியின்னு
எக்கச்சக்கமா யோசிச்சுப்புட்ட
எதுக்கிப்புடி செய்யுறயின்னு
செக்குமாடா தேஞ்சுப்புட்ட

என்னோட சுத்துனவுக
எராளமா இருந்தாயிங்க
நீ எக்குத்தப்பா சொன்னதால
நா தொணயில்லாம காலியானெ

ஏதோ ஒரு நாளுலதா
என்னத்தேடி நெருங்கி வந்த
ஊக்கு போட்டு புடிச்ச மீனா
துடிச்சு கெடந்து நானிருந்த

நெருங்கிவந்த சிறுக்கி நீயூ
நெஞ்ஜோடில்ல சேந்துப்புட்ட
பாவி வாய மூடிப்புட்டு
காதலுன்னும் சொல்லிப்புட்ட

கடுகளவு நெனக்கவில்ல
கட்டித்தங்கோ நீயாடி
கன்றாவி என்ன பாத்து
கட்டுபாட்ட மீறி நின்ன
காதலிச்சு கரியாகி
உருப்படாம போகப்பாத்தே

எவ்வளவோ சொல்லிப்பாத்தே
என்னெனவோ செஞ்சும்பாத்தே
என்னக்கருமண்டி ஏங்கிட்ட பாத்தே
எதுக்காண்டி வந்து சிக்கபாத்தே

பொழப்பத்த நானு பொறிக்கியா இருந்தே
பொம்பள நீயு மாத்திப்புட அலஞ்சே
பொலம்புனப்பல்லா நம்பவுமில்ல
பொறுப்பான உன்ன வாத்தசொல்லி கொன்னே

பொண்ணுன்னும் பாக்காம
பொசகெட்டு பேசிநின்னே - நீ
பொறுமையா இருந்தக்காண்டி
பொல்லாப்பு கண்டுப்புடல

அவுத்துவிட்ட ஊர்காளையா
அடங்காமே இருந்த என்ன
அன்ப கொட்டி அடக்கப்பாத்த
அடிப்பட்டு கேவலப்பட்டு

யேன்செஞ்சே எதுக்குசெஞ்சேன்
இத்தனையு உனக்காண்டி
என்னவிட்டு தள்ளியிருந்தா
ரோசாப்பூவா மணமணப்பே
நீ வெல்லமாட்டோ உருகப்பாக்க
எம்மனசுந்தாங்கிடுமா,,,!!!

போட்ட பூவு வாடும் முன்ன
படுக்கைகள மாத்திப்போட்டே
வாசம்போன பூவெடுத்து
காலால கசக்கிப்புட்டே
பலப் பேரு பலவிதமா
பணத்துக்காண்டி ஒண்டிவந்து
பாசாங்க பாய்விரிச்ச
கண்ணாள ராத்திரிங்க
ஒண்ணா ரெண்டா
எண்ணிக்க எனக்கில்ல,,,
அந்த நாளு நெனவெல்லா
அன்பா நீ பாக்குறப்போ
அடங்கிருக்குற இந்நேரோ
ஊசியாக் குத்துதுடி

நூலளவு கொண்டு போயி
நுனிக்கல்லு அழகப்பாத்து
மோதிரம் வாங்கியாந்தே
அடுக்கடுக்கா பட்டுச்சேல
ஆகாசந்தொட்டுவிட
அயராமே பாத்துப்பாத்து
மயில்வெச்ச மஞ்சச்சேல
மனசார எடுத்துக்கிட்டே
மோதிரோ நா மாத்திவிட
நாளொண்ணு நாம்பாக்க
நீ எனக்குன்னு சொந்தமானே

பொத்திவெச்ச வெக்கமெல்லா
பொடிப்பொடியா நொறுங்கிப்போக
முத்தங்கொடுத்த கன்னமெல்லா
தாமரையா செவச் செவக்க
நீ வாசப்படி பூத்துக்கெடக்க
வந்ததடி யேம்பிறந்தனாளு

மையிட்ட கண்ணழகா
மாவில வாசமழகா
மருதாணி செகப்பழகா
கன்னக் குழியழகா
பறந்துவிரிஞ்ச முடியழகா
கையிட்ட வளையழகா
காலிட்ட கொலுசழகா
நெத்திநெறஞ்ச பொட்டழகா
வாய்நெறஞ்ச சிரிப்பழகா
தலத்தழைய பூவழகா
எடுத்துவெச்ச நடையழகா
என்னப்பாக்க நின்ன
செவ்வாக்கெழமெ அழகா
பரந்த ரோட்டழகா
ரோட்டோர மரமழகா

எதயுமே பாக்காமெ
என்னமட்டு பாத்தவளா
கண்ணமூடி நடந்தவளா
உங்காலடி முந்தவார
காலனு முந்திட்டானே
நானுன்ன விட்டுட்டேனே

எங்கபோன என்னவிட்டு
ஏதேதோ சொன்னபோல
எல்லாமே வெட்டிப் பேச்சா
வாழ்ந்ததெல்லா கனவாப்போச்சா
கண்ணாள பேச்செடுத்தா
கல்லற வாசமடிக்குது
கட்டிவெச்ச சப்பரப் பந்தலு
எருகம்பூ வாசமடிக்குது
ஏண்டி நீ இல்லாமே
எதுவுமே இல்லெயேடி
எதுக்காக வாழுரன்னும்
எனக்கே தெரியலடி

எங்காலமு கேள்வியாச்சு
யேநெஞ்சுக்குழி வேகுராப்புல
உன்நியாபகந்தா சொந்தமாச்சு

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (7-Apr-13, 3:34 am)
பார்வை : 173

மேலே