இளைஞன் எப்படி இருக்க வேண்டும்

வறுமை போய் வளமை சேர,
அடிமை ஒழிந்து சுதந்திரம் பிறக்க,
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வலிமை,
உள்ளோர் கை இளைஞர் கை !

அன்னையையும் தந்தையையும்
உலகமாய் மதித்து
அன்பின் உணர்வை ஆழ புரிந்து ,
அலட்சியம் செய்யும் போக்கை மாற்று !

உன்னிடம் இருப்பதை ஊருக்கும் கொடுத்து
தன்னலம் மறந்து பொதுநலமாக,
ஏழையின் கைக்கும் இனிமை காட்டு !

முதியோர் அரசியல் இதுவரை போதும்
இளமை ரத்தம் இன்றே பாய்ச்சி
தொழிற்படிப்பை கொஞ்சம் மாற்றி
அரசியல் கற்று ஆளுமை செய் !

ஓட்டைகள் விழுந்த பழையை சட்டம்
தூசு தட்டி ,புது விதி புகுத்தி
நடுநிலை சட்டம் உடனே இயற்றி
மக்களை காக்க பாடுபடு !

ஊழல் மலிந்த உலகம் மாற்ற
நேர்மை நெறிகளை போதித்து காட்டி
நீதியின் பக்கம் வளமை சேர் !

தேனை தேடும் வண்டினை போல
மதுவை தேடும் மடமை தவிர்த்து
மானுடம் போற்றும் மனிதனாய் வளரு !

பெண்களை பார்க்கும் கண்களை மாற்றி
அண்டங்களை நோக்கி அகண்டவிழி பாரு
மெய்ஞானம் ஊறிய நெஞ்சுக்குள்ளே
விஞ்ஞானம் நிறைய கற்று தேறு!

கொன்று தின்னும் மிருகம் போல
அழித்து வாழும் நிலையை மறந்து
அன்பாய் பகிர்ந்து உண்டுவாழ்ந்து
ஊருக்கு தொண்டனாய் உன்னை மாற்று!

மனிதனை மிதிக்கும் மதங்களை மறந்து
மனிதனாய் மதிக்கும் சமத்துவ கொள்கையை உலகெங்கும் பரப்பி காட்டு !

உயிர்களை கொள்ளும் தீவிரவாதம்
உன்னையும் கொள்ள காத்துகிட்டிருக்கு
அறிவின் வலிமையால் உலகை மாற்றி
உண்மை அன்பை போதித்து காட்டு !

எதுவும் முடியும் இளைஞன் உன்னால்
துணிந்து இறங்கி துணிவை காட்டு
அடுத்தவர் நலமும் மற்றவர் குணமும்
மதித்து வாழும் மனிதனாய் வாழ் !

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Apr-13, 11:26 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 199

புதிய படைப்புகள்

மேலே