கலைந்த தியானம்

தனது
முழு பலத்தையும் கொண்டு
எழும் பிணத்தை
மனதை கல்லாக்கி கொண்டு
அடிக்கும் பிணம் எரிப்பவனின்
மனமெங்கும்
எரிந்து விழுகிறது......
ஒரு
தலைவனற்ற வீடும்
பல
தவம் கலைந்த
தியானமும்....

எழுதியவர் : கவிஜி (7-Apr-13, 4:48 pm)
Tanglish : kalaintha thiyanam
பார்வை : 99

மேலே