வர்ணஜாலம்

கருவறை கருப்பிருட்டைப்
பழகிய குழந்தை.

உலகத்து வெள்ளை வெளிச்சம்
பட்டு உற்சாகம் கொள்கிறது.

வண்ணங்கள் தட்டுப்படும்போது,
அதன் துள்ளல்கள் தலை தூக்குகிறது.

ஒவ்வொரு நிறத்திற்கும்,
ஓர் மகத்துவம் உண்டென்பர்.

நிறங்கள் விழியடைந்து,
வேதியல் மாற்றம் ஊற்றேடுபதால்,
தேகம் சிலாய்த்துப் போவதும்
உண்மையே.

இதை உணர்ந்து,
கொஞ்சம் உள்வாங்கி,
என் குடியிருப்பின்,
நிறத்தையும் மாற்றலானேன்.

வாழரையில்,
நீல வானத்தை சற்று சுருக்கி,
பிரதான சுவரில் சூடினேன்.
மற்ற சுவர்களில்,
இளம் பச்சையில்,
இளைத்தெடுதேன் - இந்நிரங்கள்,
மனச்சிக்களின் வீரியத்தை,
மங்கச் செய்யுமாம்.

பசியாறும் அறையை,
இளம் சிகப்பு நிறத்தில்,
முக்கி எடுத்தேன் - இது
செரிமான சக்தியை
அதிகரிக்குமாம்.

சமையல் அறைக்கு,
பழுப்பு நிறம் - இது
சமைப்பவரின் சலிப்பை,
சற்று குறைக்குமாம்.

படுக்கை அறைக்கு,
பல பல வண்ணங்களின்
கலவை நிறம் - இது
கருத்து வேறுபாடுகளை,
கத்தரித்து விடுமாம்.

குழந்தையின் அறையில்,
பொம்மைகள் நிறைந்த
ஓவியங்கள் - இது
குழந்தை தன்மையை குறையாமல்,
பார்த்துக் கொள்ளுமாம்.

குளியல் அறைக்கு,
நீர்வீழ்ச்சி நிறம் - இது
குளிப்பவரின் கவனத்தை
குளிப்பதில் மட்டுமே கட்டிப்போடுமாம்.

கழிப்பறைக்கு,
வயல்வெளி நிறம் - இது
காலைக்கடனை சுமூகமாக்கும்.

இந்த ரம்மியத்தை,
ருசித்துப் பார்க்க,
பலாயிரம் செலவு செய்து,
நிறங்களைத் திருத்தியமைதேன்.

வண்ணப் பரிச்சைக்கு,
என் நான்கு வயது,
வண்ண மகளை,
அவளின் மூன்று வயது
நண்பணோடு,
குழந்தை அறைக்கு கூடிச்
சென்றேன்.

ஆச்சிரியமாய் பார்த்தாள்,
அடுத்த நொடியே,
நண்பனோடு ஓடி விளையாட,
ஆரம்பித்து விட்டாள்,
வேறு அறையில்!!!

பல நாட்கள் முயன்று பார்த்தும்,
அந்த அதிசிய அறை,
அவளை வசியப்படுத்தவே இல்லை.

ஒவ்வொரு முறையும்,
நான் மட்டுமே குழந்தையாய் மாறினேன்.

மனச்சிக்கல் குறைந்ததாய்,
நம்பலானேன் - இருந்தும்
ஒரு மனநோயாளியாய்,
வாழரையில் வாடிக் கிடந்தேன்.

பல வண்ணத்தில் நம்பிக்கை கொண்டு,
பொய் காதல் பூண்டு,
கட்டிப் புரண்டோம் - இன்றோ
ஒரே படுக்கையறையில்
இரு படுக்கைகள்.

படுக்கை தனியானதால்,
அடுப்படியிலும் பிளவு.

களிப்பரைகூட,
காலையில் கடுப்பேற்றுகிறது.

எங்கே போயின,
வர்ணஜாலத்தின் மகிமை?
ஆசையின்றி ஆராய்ந்தேன்.....

ஐயும் புலன்களுக்கும்,
நிறத்திற்கும், தொடர்பிருப்பது,
உண்மையே.

மரங்களின் பச்சை நிறம்,
நம்மை பாந்தப் படுத்தும் - எப்போது?

பச்சை நிறம் விழிகளில்,
விழும்பொழுது - கூடவே
மரத்தின் தென்றல் நம்
தேகத்தை தீண்டும்போது.

நீல வானம்,
நிம்மதி தரும் - எப்போது?
வானத்தில் சிறகடித்து பறக்கும்,
பறவைகளின் ரீங்காரம் நம்,
செவிகளை சில்லிப்பூட்டும் பொழுது.

இதை புரிந்துகொள்ளாமல்,
இயற்கையை செயற்கை முறையில்,
சிறைபிடிக்க நினைத்தால்,
அடைபட்டுக்கொள்வது,
நாம் மட்டுமே......!!!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (7-Apr-13, 4:48 pm)
பார்வை : 182

மேலே