காதல் வலி

யார்கூடவும் பகிர்ந்துகொள்ள
முடியவில்லை
யாருமற்ற தனிமையில்
என்னை கொள்ள முயற்சிக்கிறாள்
நினைவாக வந்து....

கத்தி பட்ட காயம் கூட
வலிக்கவில்லை அவள்
சுவாசம் தீண்டிய என் மேனி
தீ பற்றி எரிகிறது
அணைக்க மனமில்லை
அனைத்துக் கொண்டேன்
அவள் நினைவுகளை....

அவள் கூரிய வார்த்தைகள்
கூரிய ஆயுதம் கொண்டு
குத்தி கிழிக்கிறது என் இதயத்தை....

அவள் என்னை பிரிந்து
சென்றாளா இல்லை என்
உயிரை பிரித்தெடுத்து சென்றாளா
உடல் மட்டும் இங்கே என்
உயிர் தேடி அலைகிறதே....

வலியாக உணரமுடியவில்லை
வலிக்கும் இடமும் அறியமுடியவில்லை
ஆனாலும் வலிக்கிறது
அவளின் நினைவு....

எழுதியவர் : பாலா (26-Nov-10, 8:15 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 641

புதிய படைப்புகள்

மேலே