காதல் உள்ளம்

கண்ணும் கண்ணும் என்றாயே
காதல் என்றும் சொன்னாயே
காத்திருகுக்கன் இப்பவே
பார்த்துக்கொண்டே உன்னாலே

பருவம் என்று சொன்னாயே
தருவன் என்று அழுதாயே
தாங்கிக்கொண்டு இருந்தேனே
தட்டி விட்டு சென்றாயே ,,,,,,,,,

உறவும் உயிரும் என்றாயே
உணர்ந்து விட சொன்னாயே
உள்ளம் என்று கொண்டாயே
என்னை உதறிவிட்டு சென்றாயே ,,,,,,,,,
பிறகும் என்னை கண்டாயே
பிரிந்துவிட சொன்னாயே ,,,,,,,,,,,

மலரும் மனமும் என்றாயே
மணந்து கொள்ள சொன்னாயே,,,,,,,,
மனம் திறந்து கொண்டாயே ......
மறந்து இருந்தேன் என்றாயே ,,,,,,,,,

தொடர்ந்து தொடர்ந்து கொண்டேனே
தொல்லை என்று உணர்ந்தேன்
எல்லை காண துடித்தேனே ,,,,,
ஏமாற்றமும் கொண்டேனே ,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (8-Apr-13, 7:11 pm)
பார்வை : 158

மேலே