காதலும் கனவும்

சிறகு இன்றி பறக்குது
சில நேரம்
உன் மனதை உடைக்குது
ஊடுருவலாம் உன்
உள்ளத்தில் நானென்று
வீடு கட்டி விருதுன்ணலாம் நாம் என்று
சொல்லு
குச்சியெடுத்து சொருகுறேன் என்னில்


சீதக சம்பாவில் அரிசியில் சோறு கட்டி
அருவி கடந்து வாறேன நான்
நீயே சிட்டு குருவி
போல வட்டம் போட்டு
திட்டம் தீட்டி திரிகிறாய்
தினம் தினம் தில்லானா பாடி

உன் முகத்தில் சிரிப்பைக்கண்டேன்
சில நேரம் நான் முனுமுத்ததால்
உன்னில்
வெறுப்பை கொண்டேனே
தனிமையில் இருந்தே தவிக்கிறாய் நீ
என்னை தாளில் பதிக்க நினைக்கிறாயே ,,,,,,,,,,'


உல்லாசம் காண
வந்தேனே உன்னுடன்
உறவாடியும் சென்றேனே பெண்ணே
சிறகுகள் இல்லை
என்றாலும் சிரமம் இல்லாமல்
சிலநேரம் பறக்குதே
என் மனது உன்னுடன் தானே கண்ணே

நாள் தோறும் உன்னை
நினைக்கையிலே தேனுறும்
என் வாயிக்குள்
மருந்து என்று கேட்டு நீ
வரும்போது விருந்தாக தருகிறேன்
விரும்பியபடி உனக்கே ,,,,,,,,,,
வீணாக்காதே தேனான என்னை
திருபவும் சொல்லுறேன் உனக்கு ,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (8-Apr-13, 7:17 pm)
பார்வை : 147

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே