புதிய தலைமுறை

அரச தலைமுறை ஆண்டகாலங்கள் போய்,
அரசியல் தலைமுறை ஆளும் காலம் ,
ஏழை தலைமுறைக்கு நீதி கிட்டாமல் ,
தவிக்குது இங்கு மொத்த தலைமுறை !

ஆண்ட தலைமுறை தழைத்து செழிக்குது,
அடிமை தலைமுறை வெறுத்து பாக்குது,
புதிய தலைமுறை புறப்பட்டால் மட்டுமே,
நீதி கிடைப்பது உறுதியாகுது !

பட்டம் படித்த இளைஞனில் பாதி ,
கூலிக்கு போய் பொழுதை கழிக்குது,
ஆயுசு முழுதும் காத்துகிடந்தும்
தலை நரைத்து மாண்டு போகுது !

சேர்த்தவர்கள் எல்லாம் செலவந்தர்களாக,
ஏழையின் நிலையோ கீழே போக,
கொடுப்பவர்கள் கை மேலேதான் இருக்குது,
உழைத்தவன் கை தரையை பாக்குது !

மாடிவீடு ஜோராய் சிரிக்குது,
குடிசைவீட்டை பார்த்து நகைத்து காட்டுது,
இந்த தலைமுறை அடித்த கொள்ளையை ,
ஏழு தலைமுறைக்கும் சேர்த்து வைக்குது !

படிக்காத மேதைகள் காலம் போதும் ,
படித்த இளைஞனை மேதையாய் ஆக்குவோம்,
ஊழலில் மலிந்த பதவி நாற்காலியை ,
உடைத்து எறித்து புதிதாய் செய்வோம் !

பொருளாதார ஏற்றம் மந்த நிலையிலே,
பெருசுகள் எல்லாம் தலைமை பதவியில்,
ஓட்டுகளுக்காக ஆட்சிகள் நடத்தும் ,
மடமை ஒழித்து மகத்துவம் செய்வோம்
புதிய தலைமுறை !

முதியவர்கள் அரசியல் முழுவதும் ஒழிப்போம்,
இனிவரும் அரசியலில் இளமையை சேர்ப்போம் ,
பழைய தலைமுறைக்கு ஒய்வு கொடுத்து ,
புதிய தலைமுறை நாம் ஆள பழகுவோம்!

எழுதியவர் : வினாயகமுருகன் (12-Apr-13, 11:02 pm)
பார்வை : 588

மேலே