பௌர்ணமி நிலவே

இருட்டிலே முளைத்து கீற்றாய் தெரிந்த,
இரண்டெழுத்து மங்கை நீ ,
மாதம் ஒரு பிறவி எடுத்து வருகிறாய்,
பௌர்ணமி நிலவே !

வளர்பிறையில் வளர்ந்து ,
தேய்பிறையில் தேய்ந்தாய்,
மனித வாழ்க்கைக்கு அழகான,
மகத்துவம் சொன்னாய் !

கொள்ளை போகுது உந்தன் அழகு,
ரசிக்க தேவை ரசனைகள் தேவை ,
ஆத்திரம் கொண்டவரும் அடங்கிப்போகும்,
ரகசியம் என்ன முகத்தில் பதித்தாய் !

ஊரெல்லாம் சுற்றி உலகமும் சுற்றி,
களைப்பே உன்னில் தெரியல,
நீ ஓரிடம் நின்றால் உலகமும் அழும்
உலக பிள்ளைகளும் ஏங்கி போகும் !

விளையாட்டு பிள்ளைக்கு,
விளையாடும் பொம்மை நீ,
ஊரில் உள்ள அன்னைக்கு எல்லாம்
ஏமாற்று குழந்தை நீ !

கைக்கு எட்டிய சாதம் ,
உன் வாய்க்கு எட்டியதில்லை,
கை தொட்டு பார்க்கும்,
தூரத்திலும் நீ இல்லை !

கொஞ்சும் காதலர் தூதுவர் ஆனாய் ,
மேகத்தில் மறைந்து விளையாட்டும் காட்டினாய்,
குளத்து நீரில் நீந்தி கடந்தாய்,
குளிர்ந்த நிலவே உன் மென்மை அழகே!

மின்சாரம் போனால் ஊருக்கு ஒளி நீ,
நீயே என்றும் உலகத்தின் ஜோதி,
கவிஞனர்கள் நேசிக்கும் காதலி ஆனாய்,
காற்றோடு ரசிக்கும் தென்றலும் ஆனாய் !

சுட்டெரிக்கும் சூரியன் ,
வீசும்புயல்,
கொந்தளிக்கும்கடல் ,
வெடிக்கும் மலை,
ஆட்டம் போடும் பூமி ,
நீ மட்டும் அமைதியாய் என்றும்!

உன்னை ரசித்து எழுதிய கவிதை ,
ஓராயிரம் உண்டு இந்த உலகில்,
ஒன்றைக்கூட நீ இறங்கி வந்து,
ரசித்தது இல்லை ஏனோ ஏனோ !

எழுதியவர் : வினாயகமுருகன் (13-Apr-13, 6:17 am)
பார்வை : 130

மேலே