ஒற்றுமை

நாம் மனித இனம் ,
சண்டையிட்டு மடிய விலங்குகள் இல்லை,
சரியென்பதும் தவரென்பதும் உணர்த்தும்,
அறிவே உனது ஆறாவது அறிவு !

சுயநலம் இதிலே கொஞ்சமும் வேண்டாம்,
பொது நலத்தோடு ஒட்டி பழகு,
ஒருவரை இகழும் இகழ்ச்சியும் வேண்டாம்,
எவரையும் ஏமாற்றும் பழக்கமும் வேண்டாம் !

ஜாதியும் வேண்டாம் மதமும் வேண்டாம்,
அனைவரையும் நீ மனிதராய் பார் ,
மனிதனை அழிக்கும் மடமைகள் தவிர்த்து
ஒற்றுமையை வளர்க்க முயன்று பார் !

மனிதராய் பிறந்த மண் இதிலே,
மனிதநேயத்தோடு இருக்க பழகுவோம்,
துன்பம் என்பது யாருக்கும் நேர்ந்தால்,
தனதாய் நினைத்து துணையாய் இருப்போம் !

போட்டி வாழ்க்கை இங்கு வேண்டாம் ,
பொதுநலம் போற்றி ஒற்றுமையாய் வாழ்வோம்,
எவரும் இங்கு உயர்ந்தவர் இல்லை,
எவரும் இங்கு தாழ்ந்தவரில்லை !

உன்னை போலவே உருவம் படைத்தவர்
உன்னைப்போலவே மனமும் படைத்தவர் ,
உன்னில் இருக்கும் உணர்வும் எண்ணமும்,
ஒருங்கே கொண்ட மனிதரும் ஆவார் !

உன்னில் இருக்கும் இன்பமும் துன்பமும்,
அவருக்கும் உண்டு என்பதை நினை ,
ஒருத்தரை ஒருத்தர் இகழ்ந்து வாழும்,
அருவருப்பான பழக்கம் எதற்கு !

இருக்கும் போது இறப்பவர்களைக்காட்டிலும்,
இறந்தும் வாழும் மனிதனாய் மாறு ,
இருப்பதை கொடுத்து யாவர்க்கும் உதவி,
மனிதநேயத்தோடு வாழ்ந்து பழகு !

எழுதியவர் : வினாயகமுருகன் (13-Apr-13, 6:36 am)
பார்வை : 235

மேலே