இருவரும் ஒருவரே

ஆணும் பெண்ணும் இரு ஜாதி,
அன்பாய் இருப்பதே உலக நியதி
இருந்தும் எதற்கு வேறுபாடு,
ஏனோ இந்த மாறுபாடு !

வாழ்க்கை என்னும் மாட்டு வண்டி
இருவர் இணையும் வண்டியே
எல்லையை கடக்கும்
தனிப்பட்ட பயணம் மனிதர்க்கு வேண்டாம்,
தழைத்து இருப்போம் ஒற்றுமையோடு!

ஆணும் பெண்ணும் இருபால் தவிர,
பண்பால் இருவரும் ஒருவரே ,
ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்தால்,
பிரிவு எனபது உலகில் இல்லை !

பிரிவு என்பது வார்த்தையிளும் வேண்டாம்,
அன்பை பிரிதல் கொடுமை கொடுமை,
மறுத்தவர் எல்லாம் நீதிமன்றம் நாடி,
மனு தொடுக்கிறார் விவாகரத்தை கேட்டு !

ஆணும் பெண்ணும் நிகரான படைப்பு,
உடலில் தோன்றும் மாற்றம் தவிர ,
உள்ளம் எனபது ஒன்றுதானே!

குறைகள் சொல்லி காலம் கடத்த,
குடும்பம் ஒன்றும் அரசியல் இல்லை,
இருக்கும் தவறையும் மறைக்க பழகும்,
மனம் மட்டுமே அமைதி தரும் !

பெரியவர் சிறியவர் எவரும் இல்லை,
இருவரும் கலந்த இல்லற வாழ்க்கையில்,
இரண்டற கலந்த குடும்பம் இதிலே,
இணைந்தே இருந்தால் இன்பம் சேரும் !

நிலையில்லா உலகில்
நிரந்தரமானது எதுவும் இல்லை,
பணத்திற்காக மனதை கொள்ளும்,
பழக்கமும் இங்கு தேவையில்லை !

வேலையை முடித்து வீட்டிற்கு போகையில்
நிம்மதியை பையில் கொண்டு போ,
வீம்பும் வம்பும் எதற்கு மனிதா,
உறவில் விரிசல்வர !

அழகாய் சிரித்து அழகாய் ரசித்து,
அன்பை போற்றி அரவணைக்க பாரு,
கோபம் கொள்வதும் குற்றம் காண்பதும்,
குடும்பத்திற்கு அழகு ஆகாது !

சந்தேக சிந்தனை இங்கு வேண்டாம்,
சமத்துவமாய் இருக்க பழகுங்கள் ,
பரஸ்பர நம்பிக்கை இருவரும் வைத்து,
இணைந்தே ஒருவராய் பயணியுங்கள்!

எழுதியவர் : வினாயகமுருகன் (13-Apr-13, 7:14 am)
பார்வை : 163

மேலே