குழந்தை Vs கடவுள்

குழந்தை Vs கடவுள்
(சென்ரியூ)

உண்டியலும் போதவில்லை
ஊத்தும் பாலும் போதவில்லை
திருவோட்டுடன் கடவுள்.

*

தேவலோகத்திலும் ஊழல்
கஜானாவும் காலி
கைநீட்டும் கடவுள்.

*

அரக்கர்களின் பூமி
கோவில் கட்ட இடமும் இல்லை
தெருவோரத்தில் கடவுள்..

*

கருவறையில் தங்கச்செருப்பு
வாசலில் பலவகைச் செருப்பு
வெறும் காலுடன் கடவுள்..

*

கொடுத்துக் களைத்த கடவுள்
வாங்க மறந்த இனம்
குழந்தை

-தமிழ்நிலா-

எழுதியவர் : -தமிழ்நிலா- (13-Apr-13, 4:44 pm)
பார்வை : 316

மேலே