இரவில் மின்னும் நட்சத்திரங்கள்

நம் மனதில் நம்பிக்கை இருந்தால் நமக்குள் நாம் அறியாமலே அமைதி,தைரியம் ,உறுதி தானாக அமையும் ..தொட்டதெல்லாம் பொன்னாகும் ....உண்மை ...

பணக்கார இளைஞன் ஒருவரின் விலை உயர்ந்த கார் அவன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தது .அந்த வழியாக வந்த ஏழைச் சிறுவன் அருகில் சென்று அந்த வண்டியை எட்டிப் பார்த்தான் ..பின் தொட்டுப் பார்த்தான்..அதன் அழகு அவன் மனத்தைக் கட்டிப் போட்டது.

அதனைப் பார்த்த இளைஞன் சிரித்துக் கொண்டே ''இது என் அண்ணன் எனக்குப் பரிசாகத் தந்தது '' என்றான்.

அதைக் கேட்ட சிறுவனின் முகத்தில் வியப்பும் ஒட்டிக் கொண்டது. ''உனக்கு இப்படி ஒரு அண்ணன் இருந்திருக்கலாம் என நீ ஆசைப் படுகிராயோ?என்றான் இளைஞன் .

அதற்கு ஏழைச் சிறுவன் சிறிதும் யோசிக்காமல் .,'' இல்லை இல்லை...அப்படி ஒரு அண்ணனாக நானும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன் '' என்றான்.

இதல்லவா நம்பிக்கை. அடுத்தவனிடம் கை ஏந்தாமல் ,தான் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தான் நமக்கு நன் நம்பிக்கை கொடுக்கும் .

எதிர்பார்த்தது உடனே நடக்காவிட்டால் நடந்ததை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு... ,,எதிர்பாராமல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் வாழ வேண்டும் என்பதே...இக் கதைச் சிறுவனின் நம்பிக்கை நமக்கு உணர்த்தியது.

எழுதியவர் : நான் படித்தவை (15-Apr-13, 11:10 am)
பார்வை : 206

மேலே