இதயத்தைப் பாடவைத்தவன்

பி.பி.ஸ்ரீநிவாஸ்-

தாய் பாடிய தாலாட்டை
கேட்டதில்லை..
இதுவரை
நீ பாடிய பாட்டுக்களை
கேட்காமல் துயில்வதில்லை

நீ
காற்றில்
வார்த்தைகளை
வரைந்து வைத்தவன்
காற்றுக்கு
உருவம் கொடுத்தவன்
இசை ஓவியனே!
காற்று இருக்கும் வரை
போற்றிப் பாடும் உன்னை.

நீ
இதயத்தைப்
பாடவைத்தவன்
அதனால்தான்
உன் பாடல்கள்
இதமாக இருக்கின்றன
குயில்களும்
உன் குரலோசை கேட்டால்
மௌனமாகி விடும்

நீ
ஒலியை
நளினமாக
நாட்டியமாட வைத்தவன்
நங்கையின் நாணத்தோடு
நடை போட வைத்தவன்.

உன் பாடல்களில்
அழுத்தம் இருக்காது
அமுதம் இருந்தது
ஆர்ப்பாட்டம் இல்லை
அமைதி இருந்தது.

இன்று
மரணம் உன் உடலுக்கு
என்றும் இல்லை
மரணம் உன் குரலுக்கு.

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (15-Apr-13, 2:53 pm)
பார்வை : 103

மேலே