malai naal nayagan

அன்று ஒரு மழை நாள்
மோகம் கொண்ட மேகம்
பகலவனை அணைத்து
பனியை படரவிட்டது
அதன் வெட்கத்துளிகள்
பூமி நுனியை நனைத்த
வண்ணம் இருந்தன

இடியோடு என் இதய
சத்தமும் அதிகரித்தது
வீட்டு மாடியின்
ஓட்டைக் கதவில்
ஓர பார்வை பார்த்து நின்றேன்

மழைத்துளி ஓசை
என் கால்களை
காந்தமாய் ஈர்த்தது
மெல்ல மழையை கிழித்து
கதவை திறந்து விடுபட்டேன்

நான் அறியாமல் கால்கள்
தேங்கிய துளிகளோடு அளவலாவின
அந்த உரையாடல் ஓசை
மணிக்கொலுசு ஓசையை தோற்கடித்தது

என் உடலெங்கும் துளிகள்
நீர் கோலம் வரைந்தன
கலையாத தலைமுடியை
காற்று வெகுவாக களைத்துவிட்டது
கேட்காத இசை கேட்டு
தானாக புலன் அசைந்தது

சட்டென்று மனதில் ஒரு சஞ்சலம்
பட்டென்று இமை திறந்தது
சலிக்காது ஒரு ஆண் பார்வை
பார்க்காமல் என்னை பார்த்தது
இல்லாத சிறகுகளோடு என்
இமைகள் பரக்க முயன்றன

வில்லாலும் முடியாத அளவு
விரைவாக வளைந்தன
அவன் புருவங்கள்
எவராலும் காண முடியாத
மந்தகாசம் காட்டின
அவன் இதழ்கள்

கனவென்று எண்ணி என்
தலை சிலுப்பி தடால் என்று
ஓட்டைக் கதவினுள் நுழைந்தேன்
பின் ஓர பார்வையால்
யாவரும் இல்லாத
வெளியை அலசினேன்

வானதேவன் துளிவழியே இறங்கி
பூமிக் கோலம் காண வந்தானோ
என்றெண்ணி எனக்குள் நகைத்தேன்

துள்ளி குதித்து படிஇறங்கி
அன்பு அன்னையின்
அடிகளுக்கிடையே
தும்மிக் கொண்டே
தந்தையிடம் சரண் புகுந்தேன்

endrum mangaatha அந்த
மழை nayagan vanna mukam
avvapothu kanavodu
kandu vilithaen

pinbu ஒரு malainaalil
என் mana நாள் mudivanathu
thozhiyar kisukisukka மெல்ல
enavar muham parka
nimiramal nimirnthaen
nimidathil என் ullakam nindrathu

என் மழை nayagan
mana nayaganaka
என் rattha naalangalin
aalam purinthavan pola
vil puruvam uyatri
மந்தகாசம் kaatinaan
அந்த அன்பு alaivarisaiyil
என் idhayam raagam paadiathu

indrum ஒரு மழை நாள்
என் வீட்டு மாடியின்
ஓட்டைக் கதவில்
ஓர பார்வை பார்த்து நின்றேன்
avar aluvalakam mudinthu
varum neram allavaa !!!...

எழுதியவர் : thendral (29-Nov-10, 3:21 pm)
சேர்த்தது : thendral
பார்வை : 729

மேலே