கனவுகளை வளர்க்கிறேன்..! பொள்ளாச்சி அபி

உன்னிடம் இதுவரை
நான் பேசியதில்லை..
கைகளைக் குலுக்கிக்
கொண்டதுமில்லை..!

உனது முகம் எப்படியிருக்கும்.?
ஆவல் மீறினாலும்
பார்த்துவிட முடிந்ததில்லை..!

என்றாவது ஒருநாள்
உன்னை சந்தித்துவிட முடியும்
எனும் நம்பிக்கையையும்
நான் இழக்க விரும்பவில்லை..!

ஆனாலும்..அதுவரை
உனக்கான பாராட்டுக்களையும்
எனக்கான நன்றிகளையும்
பகிர்ந்து கொண்டே இருப்போம்..!

காணாத காதலில்..உருகுவதாய்
யாரேனும் நினைக்கக் கூடும்..,
இது நட்பின் அதீதமென
சிலரே உணரக் கூடும்..!

காத்திருப்பும்,கனவுகளும்
காதலில் மட்டுமே நீள்வதில்லை..,
காணாத நட்பிலும்
நீடித்திருக்கும்..!

நான் காத்திருக்கிறேன்,
கனவுகளை வளர்க்கிறேன்..,
ஓய்ந்து விடாத அலைகளைப் போல..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (19-Apr-13, 10:41 am)
பார்வை : 222

மேலே