நினைவுகளை ஒருமுறை -தனஞ்சன்

நீ பழைய புத்தகங்களை
புரட்டிப் பார்த்ததுண்டா ?

அதன் வாசனை கொஞ்சம்
நுகர்ந்ததுண்டா?

அட்டை பக்கங்களில்
அழுக்குகளை ரசித்ததுண்டா?

அது நூலை காக்கும்
ரகசியம் அறிந்ததுண்டா?

இடை நடுவில் சிறு
கிழிஞ்சல்களை கவனித்ததுண்டா?

என்னதான் பழையதாயினும்
அர்த்தங்கள் மாறவில்லை
உணர்ந்ததுண்டா?

ஒருமுறை கொஞ்சம் புரட்டிப்பார்
வாழ்க்கையும் ஒரு புத்தகம்தான்

எழுதியவர் : தனஞ்சன் (19-Apr-13, 10:15 am)
பார்வை : 186

மேலே