எத்தனையோ.....!!!

தென்னங்கீற்றின் இடைவெளிகளில்
தலைநீட்டும் வெண்ணிலவாய்
உன் முகத்தை
என் கற்பனையில்
ரசித்த இரவுகள்
எத்தனையோ...!
காதில் விழும் பாடல்களில்
நம்மை கற்பனைபடுத்தி
களித்த நாட்கள்
எத்தனையோ...!
காணும் காட்சிகள் யாவிலும்
உன் முகமே
காட்சிபிழையாய் வந்து போக
இதழோர புன்னகை பூத்த
நேரங்கள் எத்தனையோ...!!!

எழுதியவர் : premalathagunasekaran (19-Apr-13, 9:37 pm)
பார்வை : 77

மேலே