என் மனைவி

எனக்கு அன்பில் தாயும்
அரவணைப்பில் தாரமும்
என்னுடனான இணைந்த
என் இயக்கமும் அவளே ........

இருமனம் இணைந்த
திருமண வாழ்வில்
ஒருமனதாய் இணைந்து பயணிக்கிறோம்
எதிர்கால இலக்கை நோக்கி .......

என் மூச்சு அவள் சுவாசம்
அவள் மூச்சு என் சுவாசம்
இரண்டற கலந்த இல்லறவாழ்வில்
இறுதி வரையிலான என் துணையாய் ........

இன்பங்கள் வரலாம்
துன்பங்கள் வரலாம்
இணையற்ற சொந்தம் அவளே
என் இதயத்தின் இயக்கமும் அவளே ......

காலை முதல் மாலை வரையில்
எனக்கென சேவைகள் நிறைய செய்வாள்
தியாகங்கள் நிறைந்த பிறப்பு அவளே
தீபமாய் என் வீட்டு விளக்கும் அவளே ......

மூன்று முடிச்சியில் தொடங்கிய உறவு
100 வரைக்கும் அவளே தோழன்
நடுவில் வந்த சொந்தங்கள் மறையும்
நிறைவான சொந்தம் அவளே
நிலையான சொந்தமும் அவளே .......

வறுமையும் இருக்கும் வசதியும் இருக்கும்
எதுவந்த போதும் இனையென இருப்பாள்
துன்பத்தில் நான் துவளும் வேளையில்
ஆறுதல் சொல்லி இதயம் தேற்றுவாள் .........

அழுகையும் இருக்கும் சிரிப்பும் இருக்கும்
அவளது முகமே துன்பம் தீர்க்கும்
இதமாய் சிரிக்கும் சிரிப்பினாலே
எல்லா கவலையும் களைந்து மறையும் .......

என் நலம் நாடும் அவளது உறவு
என் குளம் காக்கும் அவளது கருணை
தன்னலம் பாராமல் தொண்டுகள் செய்வாள்
தலைகோதி ஆசையாய் கொஞ்சவும் செய்வாள் ....

இருவர் பயணிக்கும் வாழ்க்கை பயணத்தில்
இல்லறம் என்பதே நல்லறமாக
இணைந்தே பயணிக்கிறோம் இறுதிவரை
"வாழ்க்கை ஓர் நல்வரமாய்" .........

எழுதியவர் : வினாயகமுருகன் (20-Apr-13, 11:06 pm)
பார்வை : 581

மேலே