என் அருமை பேனாவே
உன்னை என் கைவிரல்கள் இறுக்கி
அணைக்கும் போதெல்லாம் -என்
இதயம் சந்தேகம் கொள்கிறது
நீயும் எனதுடலின் அங்கமோ என்று ?
எத்தனை சொல்கிறேன் அத்தனையும்
மெளனமாய் ரசித்து வரும் முதல்
ரசிகன் என்று ,நான் சொல்வேன் நீ என்று !!!!
எனது எண்ணங்களில் சரி பாதி
உன்னால்தான் அருவியாய்
பொழிகிறது ,எல்லாமே கடலில்
சென்றுதான் கலக்க போகிறது -ஆயினும்
நீ நினைத்தால் காட்சிகளை
மாற்றியமைத்து கலவரமும்
செய்ய முடியும் -காவியமும் செய்ய
முடியும் !!!!
என்னை நான் போராளியாக
உணர்வதுண்டு -புரட்சி
என்னிலிருந்து உன்னால்
எழுத்துகளாய் வெடித்திடும் போதெல்லாம் !!!!
என்னை நான் காதலனாக
உணர்வதுண்டு -காதல்
என்னிலிருந்து உன்னால்
எழுத்துகளாய் மலரும் போதெல்லாம் !!!!
என்னை நான் பக்தனாக
உணர்வதுண்டு -பரவசம்
என்னிலிருந்து உன்னால்
எழுத்துகளாய் விளைந்திடும் போதெல்லாம் !!!!
என்னை நான் இறைவனாக
உணர்வதுண்டு -புதுமை
என்னிலிருந்து உன்னால்
எழுத்துகளாய் ஜனித்திடும் போதெல்லாம் !!!!
எனது எண்ணங்கள் சிவனாகும்
போதெல்லாம் உணர்கிறேன்
நீதான் சக்தியென்று
என் அருமை பேனாவே !!!!!
===============================
ராஜாஅண்ணா நல்லா இருக்கா