காதல்-ஓர் அகராதி...........!! காதலில் தோற்றவனின் பக்கங்கள்!
காதல் இனிமையானது,
காதலால் காதலிக்கப் பட்டவன்
தான் நானும்,
அவளிடம் அன்பை மட்டும்,
எதிர்பார்த்த எனக்கு,
அவள் தந்த அன்பு
அவளின் நினைவுகள் தான்!
எனக்கான காதல் அவளைப் பார்த்தவுடன் பிறந்தது,
எனக்கான உலகம் அழியும் வரை வாழப் போகிறது!
அவளுக்காக நான் இழந்தவைகளை விட
ஞான் பெற்றவைகளேஅதிகம்!
இன்பத்தை இழந்தேன்,
இன்னலைப் பெற்றேன்!
துயிலை இழந்தேன்,
துயரைப் பெற்றேன்!!
நடுக்கடலில் தவறி விழுந்தவன்
கரை இருக்கும் திசை
தெரியாமல் தவிப்பதைப்
போல்......................
காதலால் என்னை
உதறிச் சென்ற அவளால்
மூழ்கிக் கிடக்கிறேன்,
அவளின் நினைவுகள் என்னும்
கடலில் திசை தெரியாமல்!!
காதலால் வெறுக்கப்பட்டவனும்,
காதலியால் ஒதுக்கப்பட்டவனும்
நான்தான்!!
காதலால் மறைக்கப்பட்டவனும்,
காதலியால் மறக்கப்பட்டவனும்
நான்தான்!!
காதலால் விரட்டப்பட்டவனும்,
காதலியால் நிராகரிக்கப்பட்டவனும்
நான்தான்!!
இருந்தும் எதோ வாழ்கிறேன்,
என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்,
நான் வாழ்ந்து விட்டுப்
போவதே ஏதோ
ஒன்றுக்காகத்தான் என்று
நினைத்துக் கொள்ளுங்கள்!
இழந்து விட்ட யாவும்
திரும்பக் கிடைக்குமானால்,
இறைவனையும்,
துன்புறுத்த நினைக்கும்
இந்த காலத்தில்
உன்னை இழந்து
விட்டபின்பு
நீ.................
திரும்பக் கிடைக்கமாட்டாய்
என்று
தெரிந்திருந்தும் என்னால்
உன்னை மறக்கப்படுவதுமில்லை,
வெறுக்கப்படுவதுமில்லை!
உனக்கான, என் காதலை
ஏதேனும் ஓர் ஓரத்தில்.............!
இன்னும் காதலித்துப்
பார்க்க ஆசைதான் ,,,,,,,,,,,
காதலாலும்,காதலியாலும்
காயம்பட்ட என்
கடந்தகாலத்தை............!!