உணர்வாயா அவன் சொல்லை..!

ஒத்த கருத்துடையோர்தாம் நண்பரெனில்
=====உருவாகாதோ இன்னொரு போலி மதம்...!
மொத்த வேற்றுமையில் ஒற்றுமை
=====உரு காண்பது தானே நம் போதி மரம்..!
பித்துப் பிடித்தோரெனக் கத்தும் முன்னே
=====கற்றதென்ன வெறும் கையளவு..!
மெத்தப் படித்த மேதாவியாய்
==காற்றிலே கதை எழுதுவதென்ன பொய்யளவு..!
கட்டிய ஆலயங்கள் இடிப்போமெனில்
====இல்லறமும் அமைந்தது அந்த நல்அறத்தால்
இடிப்போம் கொண்டுவா உன் கடப்பாரை..!
====பல் அரம் போட்டு உன் மடப்பாறை...!
சிக்கி முக்கி கல்லை உரசிக் கற்றறிந்தோம்
====தீ வளர்க்கும் ஒரு நெறியை..!
முக்கி முக்கி நீ முனகினாலும்
====தீமையை வெல்லும் அற நெறியே !
மிருகம் எனச் சொன்னவன்
====பரவிய வெண்தாடிக் கிழவன்..!
உணர்வாயா அவன் சொல்லையும்
====உரசி உணரச் சொன்னதை
======உணராத நீ பகுத்தறிவுப் புலவன்..!
இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் குடி
===கெடுப்பார் இன்றிக் கெடும்
படிப்பாயோ எம் பைந்தமிழ்ப் புலவன் கூற்று..! ====கெடுப்பாயோ இன்னுமெம்
===================-தொண்டுக்கிழம் கீற்று..!
க னா கருப்பட்டி..!
வ னா வழிச்சு நக்கி..!
நாங்களும் கற்றிருக்கிறோம்
கரும்பலகை காலத்திலேயே !