பிஞ்சு மனம் போகுதய்யா...
பட்டணத்துக்கு ஓடிப் போயி
நாலுகாசு பாக்க வேணும்- நாளும்
போட்ட கணக்கை எல்லாம்
நினைச்சி மனம் ஏங்குதய்யா...
வெந்த மனம் நோகுதய்யா...
பிஞ்சு மனம் போகுதய்யா...
வாரேன்னு சொல்லி செல்ல (வயலிடம்)
போன என்னை மயக்கிவச்சு
புண்ணியம் வந்து சேருமுணு
பஞ்சம் பிணி ஆறுமுணு
சொன்ன பேச்சைக் கேட்டு- நானு
உயிரைப் பிடிச்சு வச்சேனே!
மனைவி மக்க பாராம
அவ நினைப்பில் அலங்கரிச்சேன்
ஏரைப்பூட்டி விதையைக் கூட்டி
முத்து வியர்வை ஆரங்கட்டி
பச்சசேலை வாங்கி தந்தேன்!
எந்தாயி அழகை எல்லாம்
கண்ணேறு களை கழித்தேன்!
நாள் வகுத்து பார்க்கையிலே...
ஈவு போன்ற பந்தம்- வந்து
நெடுங் கணக்கில் தொடருமுனா...
கரியன் வந்து சாய்ச்சுப்புட்டான்!
போட்ட கணக்கு மாறவில்லை
நாலு காசு மீதியில்லை...
ஈவு எந்தன் உயிரேயம்மா...
பிஞ்சு மனம் போகுதய்யா...
பட்டணத்தை நோக்குதய்யா...