கனவை களவாடாதே!!!
நேற்றுவரை
என் நினைவை மட்டுமே
திருடிய நீ
நேற்றிரவு வந்து
என் கனவையும் திருடிக்கொண்டாய்!
கனவை களவாடிய உன்னை
கையும் களவுமாக பிடிக்க நினைத்து
நான் எழுந்ததால்
நீ பிழைத்துக்கொண்டாய்!
இன்று உன்னை
கண்டிப்பாக பிடித்துவிடுவேன்!
இன்றும் நீ என்
கனவை களவாட வருவாயா!?
கண்டிப்பாக வா!!!