ஒரு துளி எச்சில்
குறள் தந்த கவிதை-13
ஆழ் கடலுக்குள்
அமிழ்ந்து கிடந்தாலும்
ஆ...வென்று
முத்துச் சிப்பி
வாயைப்பிளப்பது....?
வான் மழையே!
நீ உமிழும்
துளி எச்சிலுக்காக..!
உன் ஒரு துளி எச்சில்
முத்தாகும் மாயமென்ன...?
மாமழையே!
உன் மழைத்துளியில்
மறைந்திருக்கும்
மந்திரமென்ன...?
நீ இல்லையேல்
முத்துச் சிப்பியும்
வெற்றுச் சிப்பி ஆகிடுமோ...?
............பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள்-13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.