ஆசைகளின் ஏக்கம்
"ஆயிரம் சோகங்கள் இருந்தாலும் என்ன
ஆசையாய் நீ ஒரு முத்தம் தந்தால்
அழகாய் பூ பூக்கும் என் வயது
உன் பெயரை சொல்லி ,,
அறியாமையால் நான் கண்ட காதல்
தெரியாமல் நான் கொண்ட மோதல்
எல்லாம் புரிந்தது பெண்ணே உன் ஓர விழி பார்வையால் ,,
உடனிருக்கும் ஒவ்வொரு நொடியும்
உடைந்து கொண்டிருக்கிறேன் உன்னால்,,,,
உயிர் மட்டும் உடையவில்லை ஏனோ,தன்னால் அதுவும் உடையும் உனக்காக ஒருநாள் ,,,,,