மூச்சுபோனால்

தாய்வழி வந்தவன்
சேயென பிறந்தவன்
மனிதனாக வாழ்ந்தவன்
மரணமானால் பிணம் .........

தொப்புள்கொடி சுவாசம் தொடங்கி
மூக்கின் வழி சுவாசம் தொடர்ந்து
உடலைவிட்டு காத்து போனால்
நாத்தமெடுக்கும் உடம்பு இது .......

இருக்கும் வரை மனிதனென்பான்
இறந்த பின்போ பினமென்பான்
நடுவில் வாழும் வாழ்க்கை தானே
மிருகம் என்பதும் மனிதன் என்பதும் .........

ஊர் ஊராய் ஓடி உழைத்து
உலகம் முழுக்க சொத்து சேர்த்து
மூச்சென்பது நின்றுவிட்டால்
ஆறடிதான் உனக்கு சொந்தமாகும் .......

எல்லைத்தாண்டும் மனித நெறி
கொள்ளை போகும் மனிதவாழ்வு
இருப்பதையெல்லாம் நீயே சேர்த்து
போகும்போது என்ன மிச்சம் .......

சுயநலமாய் வாழ்க்கை வாழ்ந்து
பொதுநலத்தை குழியில் புதைத்து
தன்நலத்தோடு இருந்தவரெல்லாம்
மூச்சுபோனபின் தனித்துபோனார் ............

அரசியலில் பெரும் புள்ளி
அண்டம் தாண்டும் விஞ்ஞானி
போதித்த ஆசான் கூட
காற்று பிரிந்ததும் கல்லறைதானே இறுதி ......

இன்றிப்பவன் நாளை இல்லை
எந்த நொடியும் உறுதி இல்லை
மூச்சுஇருக்கும்வரை வாய்ப்பிருக்கும்
முடிந்தவரை உதவி செய் மனிதனாக மரணம் செய்

எழுதியவர் : வினாயகமுருகன் (28-Apr-13, 7:16 pm)
பார்வை : 62

மேலே