கொசுக்களுக்கும் பொறாமையோ!
கனவிலாவது வீடொன்று
கட்டிடலாமென்று---நானும்
கண்களை மூடினால்---துயில
கண்களும் மறுக்கிறது.
கொசுக்களுக்கும் பொறாமையோ!
கொட்டிக்கொட்டி எழுப்புகிறதே!
வீடெதுவும் கட்டவில்லை
வியாதியைத்தான் கட்டினேன்!
சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.