யார் யாரை படைத்தது

மனிதன் பரிணமித்தான்
படைக்கப்பட்டான் என்பது பொய்யுங்க
பொய்யெல்லா ஒண்ணா சேந்துச்சுங்க
இன்று உலகை ஆள்வதை கொஞ்சம் பாருங்க

வர்ணாசிரம தர்மத்த பாருங்க
அது என்னன்னு சொல்ற கேளுங்க
சிவனின் நெற்றியில் பிராமிணனும்
சிவனின் மார்புல சத்ரியனும்
சிவனுடைய வயிற்றுல வைசியனும்
சிவனுடைய பாதத்துல சூத்திரனும்
பிறந்ததா சொல்ற தர்மமுங்க

யாரை பாதுகாக்க இந்த தர்மம் தோன்றிச்சு
யாரை பாதுகாக்க சூத்திரனை அடிமையாக்கினான்
நீங்களும் கொஞ்சம் சிந்திங்க
நிலப்பிரபுக்களை பாதுகாக்கத்தான் நம்புங்க

ஆதிமனிதன் கடவுளுக்கும்
இன்றுள்ள கடவுளுக்கும்
சம்மந்தம் இருந்தா சொல்லுங்க
எதைக் கண்டெல்லாம் அவன் பயந்தானோ
அதைத்தானே ஆதிமனிதன் வழிபட்டான்
அதுதானே உண்மைங்க
நான் சொல்வதில் பொய்யிருந்தால் சொல்லுங்க

ஆற்றுச் சமவெளி மனிதனுக்கு
நாகரீகம் கற்றுத் தந்தது உண்மைங்க
அங்கேதான் கடவுளும் கற்பனை கதைகளும்
தோன்றிச்சுங்க

இப்படித்தான்
கடவுள் குறித்த கருத்தை
மனிதனும் காலத்திற்கேற்ப மாற்றிக்கிட்டாங்க

இப்போது நீங்களும் சொல்லுங்க
கடவுள் மனிதனைப் படைத்தானா ?
மனிதன் கடவுளைப் படைத்தானா ?i

எழுதியவர் : porchezhian (28-Apr-13, 9:01 pm)
சேர்த்தது : porchezhian
பார்வை : 81

மேலே