தாயின் கருவறை
மீண்டும் கிடைக்காத
பத்துமாத தவம்
எவரும் திரும்பாத
கருவறை கோவில் ..........
உயிர்கள் இங்கே ஜனனமாகும்
உடல்கள் இங்கே உருப்பெறும்
தாயும் கூட பிரம்மா ஆவாள்
உயிர்களை அவளும் படைப்பதால்.......
இங்கு ரத்தமும் பாலாகும்
பாலும் இரத்தமாகும்
அணுவும் உயிராகும்
உயிரும் அணுவாகும் .......
தொல்லைகளில்லாத பத்துமாதம்
எல்லைகள் இல்லாத ஸ்பரிசம்
கேட்கப்படாத பாதுகாப்பு
வரையறை இல்லாத அன்பு ......
இருட்டு உலகம்
ஆனால் இது இன்ப உலகம்
தாயின் கருவறை ஓர்
கடவுளின் சொர்க்கம் ...........