உன்னுடையது என் வசமாகட்டும் !
என் இதயத்தின் பலம்
குறையும் நேரம் உன்னுடையது
எல்லாம் என் வசமாகட்டும்..
என் வாழ்க்கை தோல்வி
நோக்கி நகரும் போது
உன் வேர்கள் தேடி
அவை வளம் பெறட்டும்....
என் நெஞ்சம் நம்பிக்கை இழக்கும் போது
உந்தன் வாய் வார்த்தைகள் எனக்கு வாழ்வளிக்கட்டும்......
பிரிவை கடக்கும் எந்த
நிமிடங்களிலும் கூட
நினைவோடும் கனவோடும்
இணைந்து நம் நேசம் உலகாளட்டும்.....
..