இன்னுமென்னை என்ன செய்யப்போகிறாய் என் அன்பே!?
உன் இடுப்பு மடிப்புக்குள்ள
=====என் மனச ஒழியவச்ச
உன் கன்னக்குழி நோக்கி
=====என் எண்ணம் அலையவச்ச
உன் கூந்தல் கருமைக்குள்ளே
=====என் ஏக்கம் பிடுச்சுவச்ச
உன் விழியின் ஒளியாலே
=====என் மொழிய மறக்கவச்ச
உன் இதழை சுழுச்சுக்காட்டி
=====என் இதயம் பறுச்சுப்புட்ட
உன் குரலில் போதையூட்டி
=====என் செவிய மயக்கிப்புட்ட
உன் கால்விரலால் கோலமிட்டு
=====என்னை வெட்கம் அடையவச்ச
என்னை முழுசாய் எடுத்துக்கிட்ட
=====இன்னுமென்ன செய்யப்போற!?