பிச்சைக்கார குழந்தை

பொறுமை தவறிய அவசர வாழ்க்கை
ஒழுக்கம் தவறிய ஆணும் பெண்ணும்
நியாயம் தவறிய குழைந்த பிறப்பு
நேயம் தவறி அனாதையாய் குப்பையில் .......

கொளுத்தும் வெயிலில் செருப்பில்லாமல்
கந்தல் துணியை போர்த்திக்கொண்டு
கண்ணீரோடு கை ஏந்தும் பரட்டைதலைகள்
பாவப்பட்ட இந்த பிள்ளைகள் ...............

பெற்றவரும் தெரியாமல்
உற்றவர்கள் இல்லாமல்
இருக்குமிடம் இல்லாமல்
நடைபயனமே தொடர் வாழ்க்கை .........

பசியின் கொடுமை முகத்தில் தெரிய
பாசத்தின் ஏக்கம் கண்ணில் தெரிய
நேசக்கரம் கேட்டு நீட்டும் கைகளை
தட்டி கழிக்கும் நிலையில் பலபேர் ......

மிட்சங்களுக்கு பிறந்த மிச்சங்கள் இவர்கள்
எச்சங்களை உண்டு வாழ்பவர்கள் இவர்கள்
சாலையோரமே வசிக்கும் வீடு
எந்நேரமும் பசிக்கும் வயிறு ........

யாருமரியா இவர்களின் பிறப்பு
யாருமறியா இவர்களின் குமுறல்
யாருமறியா இவர்களின் வலி
யாரும் நேசிக்காத இவர்களின் வாழ்க்கை ........

பிச்சை ஏந்தும் பிஞ்சு கைகள்
எச்சில் தூவுது கல் மனங்கள்
கொடுமைகள் சிந்தும் வார்த்தைகளாலே
குருதி வடியுது நெஞ்சில் தினமும் ........

இவர்களின் தவறுகள் என்ன இருக்கு
எவரோ செய்த தவறுகள் இவர்கள்
பிழைப்புக்காக பிச்சைகேட்கும்
வழியை விட்டால் வேறென்ன இருக்கு ........

உதவி செய்ய மனம் மறுக்கும்
உபசாரம் மட்டும் தவறாய் செய்யும்
பிச்சை கேட்க்கும் பிள்ளைகளை பார்த்து
எங்காவது திருட சொல்லி மனதை கெடுக்கும் ......

தவறி பிறந்த பிள்ளைகள் இவர்கள்
தவறாகவே வாழ விரும்புவதுமில்லை
ஒழுக்கம் போதித்து வாய்ப்பு கொடுத்தால்
மாறும் ஒருநாள் இவர்களின் வாழ்க்கையும் .......

கல் மனதை நாமும் மாற்றி
மெல்லிய சொற்களால் அவர்களை திருத்தி
உணவு கொடுத்து ஊக்கமும் கொடுத்து
உயர்த்திவிட்டால் ஓர் நாள் அவர்களும் உச்சத்தில்.

எழுதியவர் : வினாயகமுருகன் (30-Apr-13, 6:51 am)
பார்வை : 114

மேலே