உன் இதயம்

பிரிவு என்பது
நிரந்தரமானதல்ல
உன் பிரியமானவளின்
பிரியம்
உன் மீது
அதிகரிக்க
ஒரு வாய்ப்பு...

நேசமான
உன் நினைவுகளை
சுவாசமாக நினைத்து
வாசமாக
நட்டு வைத்திருக்கிறேன்...

நான் இல்லாத
நாட்களை எண்ணி
உன் இதயம் அழுவது
எப்படி எனக்கு
கேட்கும்,
என் இதயம்
உன்னிடம் அல்லவா
இருக்கிறது?...

விவாதம் என்பது
வக்கீலுக்குத்தான் அழகு,
காதல் என்பது
நம்
இருவருக்கும் தான்
அழகு,
இருப்போமா அல்லது
வெறுப்போமா?..

ஏங்கும் அன்புகளை
தாங்கும் இதயத்தை
தூக்கில் போட
தவிக்கிறதா
உன் இதயம்?.

எழுதியவர் : senthil (1-Dec-10, 4:40 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : un ithayam
பார்வை : 410

மேலே