விவசாயி வீட்டு கிடங்கு

அன்று ,
மும்மாரி பொழிந்த வானம்
முப்போகமும் தப்பாத விளைச்சல்
செழிப்பான நெற்பயிர்
செழுமையாய் விவசாயம் ...........

ஆணைகளை வைத்து
அறுவடை செய்து
ஊருக்கும் உறவுக்கும்
அளந்து கொடுத்த காலங்கள் ...........

கூலிக்கு வேலைக்கு போனவனும்
வேலைக்கு உணவு உன்ன
சீரான வாழ்நாள் அது
சிறப்பான வாழ்நாள் அது ..........

எங்கு பார்த்தாலும் பசுமை படர
குளிர் காற்று மெல்ல உடலை தழுவ
உடலும் மனமும் தென்றலோடு இணைந்து
மெல்ல சுகமாய் காற்றில் பறக்க ........

உழைத்த கைகளுக்கு வறுமையை மறுத்து
நிலமகளும் வாரிகொடுக்க
வள்ளல்களாய் வாழ்ந்தவர்கள்
வாரிக்கொடுத்து செழித்திருக்க .........

விளைச்சல் அறுவடையில்
விற்றது மிச்சம்போக சேமிப்பாய்
விதைக்கும் உணவுக்கும்
கிடங்கில் நிறைந்து கிடக்க .......

இன்று ,

மழையும் பொய்த்து போச்சு
நிலமும் காய்ந்து போச்சு
ஒரு போகம் கூட விளைச்சல் இல்லே
நிலமெல்லாம் கரம்பா போச்சு ..........

ஏழை வயிறும் காய்ந்து போச்சு
கிடங்குகலெல்லாம் காலியாச்சு
விதைக்கென்று வைத்திருந்த நெல்லும்
ஓர் வேலை உணவாய் போச்சு ...........

கொத்தி தின்ற சிட்டுக்குருவி
ஏக்கத்தோடு காத்துகிடக்கு கிடக்கு
திருடித்தின்ற பெருச்சாளி
இடம் மாறி எங்கோ போச்சு .............

ஊருக்கெல்லாம் உழைத்துக்கொடுத்தவன்
தன்னக்கேதும் இல்லாமல்
ஒரு வேலை உணவு உண்டு
ஒட்டி போச்சு வயிறு சுருங்கிப்போச்சு ........

விவசாய் நிலமும்
விவசாய் வயிறும்
அவன் வீட்டு கிடங்கும்
எல்லாமே ஈரமில்லாமல் காலியாய்
மழை வேண்டி காத்துகிடக்கு ஏக்கத்தோடு .............

எழுதியவர் : வினாயகமுருகன் (3-May-13, 8:08 am)
பார்வை : 87

மேலே