காதல்

மேல் உதடாக நான்
கீழ் உதடாக நீ
இதழ்களை ஒன்றாக சேர்த்து
இமைகள் இருளில் மூழ்க........

என் நினைவாக நீயும்
உன் நினைவாக நானும்
நினைவுகளை நினைக்க மறந்து ......

உன் கண்கள் கானல் நீரில்
விழுந்த மீனை போன்று
என்னை எப்பொழுதும் ஏமாற்றியது ..........

நான் உனக்காக ஏங்கி
தவித்ததை விட
நீ பேசும் வார்த்தைகளுக்காக
ஏங்கியதே அதிகம் ......

நான் செய்த தவறா
இல்லை நீ செய்த தவறா
நம் இதயங்களில்
விரிசல் வில....

என் வசந்த காலம்
முடிவிற்கு வந்தது
இலை உதிர் காலமாய்........

மறக்காமல் வந்துவிடு
பெண்ணே என் மரண
ஊர்வலத்திற்கு..........

எழுதியவர் : ChellamRaj (3-May-13, 7:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 242

மேலே