எழுத்து தளம் என்பது இதுதானா....???????

தங்க கவிதைகள்
தலைமறைவாக கிடக்கின்றன
மினுமினுக்கும் பித்தளைகள்
பீற்றிக்கொண்டு
முதல் வரிசையில் நிற்கின்றன....!!!!!!!!!!!?

அங்கங்கு அங்கங்கு
ஒரு கூட்டம் கூடி
மதிப்பெண் போட்டு
மார்தட்டி கொள்கின்றன
அதற்குள் மயங்கியே கிடக்கின்றன...

தனது பெயரை நிலைநாட்ட
நிமிடக்கணக்கில் பல
மொக்கை கவிதைகளும்
முழுமை பெறாத சொற்களுமாய்
எழுத்து பிழைகளோடு
எழுத்து கவிதைகள்
எழுந்து நிற்க முயற்சிக்கிறது
பதிமூன்றாயிரம் உறுப்பினர்களோடு...

பொழுதுபோக்க வந்து
பொழுதெல்லாம் இத்தளத்திலே இருந்து
கருத்து என்ற பெயரில் பல
தரங்கெட்ட சொற்களும்
நாகரிகம் இல்லா வெட்டி பேச்சும்
விவாதமும் அதனால் பல
வில்லங்கமும்...

நாட்டாமைகள் சில பல
முளைத்து பின் காணமல் போவது
இங்கு வாடிக்கையோ....

நீ கொடுத்தால் மட்டுமே
உனக்கு திரும்ப கிடைக்கும்..
நூறு கவிதைக்கு கருத்து கூறு
உன் கவிதைக்கு கிடைக்கும்
சில நூறு கருத்தோடு மதிப்பெண்ணும்...

அது கவிதைக்கு
கிடைப்பதாக தெரியவில்லை
தோழமைகளுக்கு வக்காலத்து
வாங்குவதாகவே உள்ளது...

தமிழ் இங்கு வாழவைக்கப்படுகிறது
வாழ்ந்து கொண்டிருக்கிறது...
சில பல நல்ல எழுத்தாளர்களையும்
இழந்து கொண்டிருக்கிறது...

மொத்தத்தில் இத்தளம் இன்னும் பட்டை தீட்டப்படாத வைரமே....

***ஆவாரம் பூ***

எழுதியவர் : ஆவாரம் பூ (5-May-13, 12:44 am)
பார்வை : 541

மேலே