அற்பணிப்பு
பாதச் சுவட்டில்
பனிவெடுப்பு ரேகைகள்
ஒவ்வொரு கண் சிமிட்டலிலும்
கண்ணீர் துளிகள்
மிதமிஞ்சியதாய்....
களவாடப்பட்ட பெண்மையின்
ஆதாரமாய் நேசிப்பு!
நாளும் வலியே வாழ்க்கையாக
புரிதல் மழுங்கடிக்கப்பட்டு
ஆண்மை ஓங்க....
குடும்பம் என்ற
கோவிலுக்காக தன்னையே...
அற்பணித்தவள்
அம்மா.........