சொந்த ஊர் எது?

அம்மா ஊர்
அப்பா ஊர்
பிறந்த ஊர்
வளர்ந்த ஊர்
படித்த ஊர்
வாழ்ந்த ஊர்
வாழும் ஊர்
இப்படி ஊர்களெல்லாம்
வெவ்வேறாய் இருக்க
பிழைப்புக்காக
ஊர் ஊராய் அலைபவனை
சொந்த ஊர் எது என்று கேட்டால்
எந்த ஊரைச் சொல்வது ?

வானம் தெரியும் ஊரெல்லாம்
என் ஊர் என்று சொன்னால்
அவர்களுக்குப் புரியுமா ?

எழுதியவர் : மருதபாண்டியன் (8-May-13, 12:16 pm)
சேர்த்தது : maruthu pandian
பார்வை : 217

மேலே