குழந்தைப் பருவம்

காலையில் கொடுக்கும் தேனீர் அளவு குறைவு என்று அம்மாவிடம் அடம்பிடிக்கும் வயது அது

பல் துலக்கி, குளித்து முடித்து, ஆடை உடுத்தி,
சாப்பிட போகும் பொழுது, அம்மா கேட்கும் கேள்வி,
சாமி கும்பிட்டியாடா?

பின்பு, அரைகுறையாய், சில இட்லிகளை
சாப்பிட்டுவிட்டு போய் வரேன் மா ! என்று
அம்மாவை பார்த்து சொல்லும்பொது வரும் ஏக்கம்,
ஏன் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்று !

சில நிமிடங்கள் கழித்து, வகுப்பறை,ஆசிரியை,
ஆய்யோ! நாம் ஏன் இங்கு வந்தோம் என்று திரும்பும் போது, சிரிப்புடன் என் உயிர்தோழர்கள் அருகில்!

இதுதான் என் சொர்க்கலோகம், இக்கனமே
நான் எதிர்ப்பார்த்து காத்திருந்த தருனமோ
எனத் தோன்றும் உள் மனதுக்குள்

ஆனால், காலை முதல் மாலை வரை
மிருகக் காட்சி சாலையில் அடைப்பட்டுக் கிடக்கும்
மிருகங்கள்ப் போல பள்ளிக்கூடத்தில் நாங்கள்!

கூண்டுக்கதவு திறக்காதா தப்பிக்கலாம் எனக்
காத்திருக்கும் கிளிகளாய் நாங்கள்!

மாலை பள்ளி முடிந்தவுடன், இந்தியாவிற்கு
கிடைத்த சுதந்திரம் பெரிதல்ல, எங்கள்
சுதந்திரமே பெரியதுப் போல,
சுதந்திரப் பறவைகளாய் பறப்போம்!
சில ருபாய்க்கு வாடகை மிதிவண்டி
சில மணி நேரங்களுக்கு,

பெரியது எனக்கு சிறியது உனக்கு என
அன்புச் சண்டைகள் ஏராளம்!

பார்த்து பார்த்து எடுத்த வண்டியில்
பறந்து பறந்து வீதியெல்லம் ஊர்வலம்!

நடந்து சென்ற தெருக்களில் மிதிவண்டியில்
மித மிஞ்சிய கர்வத்தில் செல்வோம்!

விடியற்காலை தொடங்கி பள்ளி முடியும் வரை
ஒரு யுகமாய் தெரியும் எங்களுக்கு
அந்தி சாயும் நேரமோ வந்துவிடும் வெகுவாக
மிதிவண்டி பயணமோ முடிந்துவிடும் அவசரமாக !

இரவு உணவிற்க்காக அம்மா தேடுவாள் தெருவில்
தேடி கால்கள் ஓய்ந்த்ப் பின்பு தான் அமருவாள் வீட்டில்!

மெல்லக் கதவு திறந்து செல்வோம்
பூனைக் குட்டிப்போல்
அம்மாவைக் கண்டவுடன் ஆகிவிடுவோம்
எலியைப் போல் !

அம்மாவிடம் இருந்து செல்லமாய் சில திட்டுகள்
அது தான் எங்கள் வாழ்க்கையின் படிக்கட்டுகள்!

தன் பசி அடக்கி சோறூட்டுவாள் எனக்கு
இன்று தான் புரிகிறது அது எனக்கு!

அந்த நாட்கள் இன்று திரும்பாதோ
நான் மீண்டும் குழந்தை ஆவேனோ!

எழுதியவர் : க.தியாகராஜன் (8-May-13, 1:39 pm)
Tanglish : kuznthaip paruvam
பார்வை : 307

மேலே