கோபம்

அன்பே என் மீது கோபம் ஏனோ
என்னைப் பிரிந்து போனதும் ஏனோ !!

உன்னைக் கான கண்கள் தேடுதே
உன்னோடு உறவாட இந்த உயிரும் வாடுதே !!

உன் மூச்சுக் காற்று வெப்பத்தினால்
என் தேகம் எரிமலையாய் கொதிக்குதே !!

நீ இல்லாமல் என் வாழ்க்கை வெறும்
கானல் நீராய் போனதே !!

உன் பேச்சைக் கேட்காமல் வற்றாத
நதிகள் கூட வற்றியதே !!

உன் கடைக்கண் பார்வை கிடைக்காமல்
பூத்துக் குலுங்கும் மலர்கள் எல்லாம்
செல் செல்லாய் சிதறியதே !!

பெண்ணே உன் கோபத்தை விட்டு விடு
என்னை உயிரோடு வாழ விடு !!

எழுதியவர் : க.தியாகராஜன் (9-May-13, 7:28 am)
சேர்த்தது : thiyagueluthu
Tanglish : kopam
பார்வை : 129

மேலே