!!!===(((மர்மம் அறியுமோ...?)))===!!!

பக்தியறைகளில்
சல்லாபட சடங்குகள் நடத்திய
நித்திக்கும்...

காமாட்சியம்மன் கருவறையை
காமக் களியறையாக மாற்றிய
தேவநந்தனுக்கும்...

கோவில் தளத்தை
கொலைக்களமாக்கிய
சங்கரனுக்கும்...

கடவுள் என்ற மாயை
உண்டா... இல்லையா...
என்ற மர்மம் அறியுமோ...?
அறியுமென்றே நினைக்கிறேன்...!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு....!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (9-May-13, 1:32 pm)
பார்வை : 146

மேலே