விமர்சனங்கள்
விமர்சனங்கள் எல்லாம்
நிதர்சங்கள் இல்லை
நிதர்சனங்களே விமர்சனமும்
இல்லை ............
மனதை காயமாக்கும்
விமர்சனமும்
காயத்திற்கு மருந்தாகும்
விமர்சனமும் ................
உண்மைக்கு புறம்பான
விமர்சனமும்
உண்மையே உருவமான
விமர்சனமும் ...........
மனிதனை கொள்ளும்
விமர்சனமும்
மனிதனை வாழ்விக்கும்
விமர்சனமும் .............
புரளி விமர்சனமும்
விமர்சன புரளியும்
மதிப்பெடுக்கும் விமர்சனமும்
மதிப்பிழக்கும் விமர்சனமும் .............
அறிவு கொடுக்கும் விமர்சனமும்
அறிவிழந்த விமர்சனமும்
ஆளை கொள்ளும் விமர்சனமும்
ஆளவைக்கும் விமர்சனமும் .............
நேரடி விமர்சனமும்
மறைமுக விமர்சனமும்
சீரழிவு விமர்சனமும்
சீர் கொடுக்கும் விமர்சனமும் ............
தோள்கொடுக்கும் விமர்சனமும்
காலிழுக்கும் விமர்சனமும்
அழவைக்கும் விமர்சனமும்
சிரிப்பூட்டும் விமர்சனமும் ............
விமர்சன உலகம் இதில்
பிறரையும் நல்லபடி விமர்சித்து
நமக்கு வரும் விமர்சனத்தை
நல்லதாய் பெற்றிடுவோம் .......

