+2 மாணவிக்கு.

விரும்பிய படிப்பு இல்லை என்றால்
உயிர் விரும்பி என்ன பயன் என்று
விண்ணுலகம் சென்றால் இந்த மங்கை ..

மருத்துவ படிபிக்கு மதிப்பெண் காணாது
என்கல்வியை மருந்தாக்கி உண்டேனே
இப்போ அதற்கே உயிரையும் அழித்தேனே ..

விரும்பியது கிடைக்கல என்று
உயிரை வருடியது சரிதானா ?
இனி ஒரு சந்தர்ப்பம் இல்லை என்ற புத்தி மங்கி
உயிரை விட்டதும் சரிதானா ?

பெண்ணுக்கு அழகு தன்மானம்
அதை கல்விக்கு அரங்கேற்றியது அவமானம்
உன் முயற்சிக்கு இனி ஏதும் தடை என்றால்
தலை தொங்கி விடலாம்..

வாழ வழி இருந்தும் வாய்க்கு அரிசி ஏன் இட்டாய் ..
உன்னை சுமந்த பெற்றோர்ர்க்கு நீ கொடுக்கும்
பரிசு உன் மரணமா ?
ஒரு முறை சிந்த்தித்து இருக்கலாம் உன்னை வாழவைக்க
அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று ..

எழுதியவர் : (10-May-13, 12:28 pm)
பார்வை : 160

மேலே