லஞ்சம் மற்றும் ஊழலுக்கான சமூகக் காரணங்கள்

லஞ்சம் மற்றும் ஊழலுக்கான சமூகக் காரணங்கள்

செந்நீரும் கண்ணீரும் சிந்தி நம் தலைவர்கள் பெற்றுத் தந்த இந்திய சுதந்திரத்தை கரையான்களாய் அரித்துக் கொண்டிருக்கிறது லஞ்சமும் ஊழலும். சமீப காலமாக லஞ்சம் வாங்கி அல்லது ஊழல் செய்து கைதாபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கான செய்திகள் தினசரிகளில் வந்த வண்ணமாகவே உள்ளது. அதைப் படிக்கும் அல்லது கேட்கும் ஒவ்வொருவருக்கும் அன்றைய விவாதப் பொருளாக மட்டுமே காணப்படுகிறது. லஞ்சம் வாங்குவதை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமெனில் லஞ்சம் கொடுத்து அவற்றை முடித்துக் கொள்கின்றனர். லஞ்சம் என்பது வாங்குபவர்களுக்கு மட்டும் இழுக்கான செயல் அல்ல. அதைக் கொடுப்பவர்களுக்குமே. அரசு நிறுவனங்களில் மட்டும் காணப்பட்ட லஞ்சமும் ஊழலும் இன்று தனியார் நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. செற்ப பணத்தில் ஆரம்பித்த லஞசமும் ஊழலும் இன்று லட்சம் கோடிகளில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இவற்றைப் பற்றி பேசும் பொழுது நமக்கு ஞாபகத்தில் வருபவர்கள் அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களுமே. ஆனால் அதை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னலமும், தப்பித்துக் கொள்ளுதலிலுமே லஞ்சமும் ஊழலும் ஒழிந்துகொண்டிருக்கிறது.

லஞ்சம் மற்றும் ஊழலுக்கான அடிப்படைக் காரணங்கள்:
அடிப்படையான காரணங்களை ஆராயும் போது பண ஆசையும், தன்னலமே மேலோங்கி நிற்கிறது. ' பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது ' என புனித பைபிள் குறிப்பிடப்படுகிறது. இன்று உலகளாவிய பல பிரச்சனைகளுக்கு பண ஆசையே காரணமாய் உள்ளது. பண ஆசையின் ஆணிவேர் என்னவென்று ஆராயும்பொழுது இன்று சமூகத்தில் மனிதனின் மதிப்பீடு அவன் வைத்திருக்கும் பணம் மற்றும் சொத்துகளின் அடிப்படையில் தான் என்ற இழிந்த நிலை காணப்படுகிறது. மேலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒழிந்துள்ள தன்னலம், அவர்களை நேர்மையானவர்களாக இல்லாமலும் பொது நோக்கம் அற்றவர்களாகவும் மாற்றுகிறது. பண ஆசையும் தன்னலமும் இன்று குழந்தைகளுக்குள்ளும் இலைமறைக் காயாய் திணிக்கப்படுகிறது என்பதும்இ இதன் விளைவு பெரியது என்பதும் உலகறிந்த உண்மை.

சமூகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலின் தாக்கம்:

லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்க்கும் நேர்மையானவர்களுக்கு சமூகம் கொடுக்கும் பெயர் பிழைக்கத் தெரியாதவன். இன்று ஒரு இளைஞனுக்கு பெண் கொடுக்க நிpனைப்பவர்கள் கூட எத்துறையி;ல் ஊதியத்தை விட கையூட்டு அதிகம் கிடைக்கும்இ அத்துறையில் பணியாற்றுகிறார்களா என்று பார்க்கும் அளவிற்கு சமூகத்தாக்கம் உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.
சமீபத்தில் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட ஒரு அரசு ஊழியரை கீழ்கோர்ட் தண்டித்து அதை பஞ்சாப் உயர்நீதிமன்றம் ரத்து செய்து அவரை விடுதலை செய்தது. அதன் மீதான அப்பீலை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் டி.எஸ்.தாக்குர் ஆகியோர் லஞ்சத்தை அதிகாரப் பூர்வமாக ஆக்கித் தொலையுங்கள் என்று வெறுப்பில் சொல்லியிருக்கிறார்கள். நாட்டின் மனசாட்சி என வர்ணிக்கும் நீதித்துறையிலே இந்த தாக்கம் என்றால் பிற துறைகளை பற்றி கூறவே வேண்டாம்.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் உலக அளவில் ஊழல்கள் நிறைந்த நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் உள்ளது. மேலும் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் - ன் அதிகாரப்பூர்வ ஆய்வு ஒன்று ' சூப்பர் பவர் ' என்ற நிலையை எட்டுவதற்கு வளர்ச்சியும் வாய்ப்பும் இந்தியாவிற்கு இருக்கிறது. எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஊழலும் மோசமான சமூகப் பிரச்சனைகளும் இந்திய ' சூப்பர் பவர் ' நாடாக ஆகவிடாமல் தடுக்கிறது என்று கூறியுள்ளது.
இதைக் காணும் போது ' பரிதானம் (லஞ்சம்) ஞானிகளின் கண்களை குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களை தாறுமாறாக்கும்' என்ற புனித பைபிளின் வார்த்தைகள் தான் நம் நினைவிற்கு வருகிறது.
முடிவாக, இன்று லஞ்சம் கொடுக்காமல் சமூக வாழ்வில் பயணிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் இந்நிலை மாற வேண்டும். முதலில் நம்மை நாம் மாற்றிக்கொண்டு, பிறகு நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இது ஒரே நாளில் மாறிவிடாது. மேலும் பணத்தினால் மனிதனை மதிப்பிடும் இழிந்த நிலையை மாற்ற வேண்டும். சக மனிதர்களை பற்றிய அக்கறை சமத்துவம் போன்ற மதிப்பீடுகள் வளர வேண்டும். ஊழல் ஒழிப்புத் துறை ஆட்சி செய்பவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அது ஒரு தன்னாட்சி துறையாக மாற வேண்டும். மக்கள் பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்ச்சியும், அறிவும் பெற வேண்டும். தன்னலமற்ற பொதுநலம் காக்க வேண்டும்.

எழுதியவர் : JamesG.Malaichamy (11-May-13, 3:05 pm)
சேர்த்தது : JamesGMalaichamy
பார்வை : 608

மேலே