அம்மாவுக்காக! ! !

பிறக்கும் பொழுது உன்னை அழ வைத்த
பாவி ஆனேன் !

இந்த பாவத்தை நான் கங்கையில் கரைத்தாலும் கரையுமா!

ஒவ்வொரு முறை நீ என்னை பராமரிக்கும் பொழுதும்!
கற்றுக் கொண்டே இருக்கிறேன் உனக்கான பனிவடைகளை எப்படி செய்வது என்று!

உன் பாசத்தை கண்டால் அந்த கடவுளும் ஏங்குவான்!
அடுத்த ஜென்மத்தில் உன் மகனாக பிறக்க!

அம்மா எனக்காக ஒரு வரம் தருவாயா? உனக்கு முன்னால் என் உயிர் போக வேண்டும்!

அடுத்த ஜென்மம் என்றால் என் மடியில் நீ தவழ வேண்டும் ஒரு குழந்தையாக!

அம்மாவும் ஒரு கடவுள் என்றெலாம் இல்லை!
அம்மா தான் ஒரே கடவுள்!

இந்த கவிதையை என் அம்மாவுக்கு சமர்பிக்கிறேன்!

எழுதியவர் : கார்த்திக் (12-May-13, 8:58 am)
சேர்த்தது : pgrkavithai
பார்வை : 66

மேலே